அதிமுக பொன்விழா: போடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதா படத்தை ஏந்திக்கொண்டு சென்றனர்

Update: 2021-10-17 11:15 GMT

போடியில் அ.தி.மு.க. பொன்விழாவை ஒட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

போடி நகராட்சியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகர செயலாளர் பழனிராஜ், துணை செயலாளர் ஜெயராமன், அவைத்தலைவர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர். போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, ஜெயலலிதா படத்தை ஏந்திக்கொண்டு தேவர் சிலை வரை ஊர்வலம் வந்தனர். அங்கு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags:    

Similar News