தேனி மாவட்டத்தில் நேற்று ஜீரோ இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று
தேனி மாவட்டத்தில் நேற்று ஜீரோ என்றிருந்த நிலையில் இன்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது;
தேனி மாவட்டத்தில் நேற்று சைபர் என்றிருந்த நிலையில் இன்று காலை மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி உள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் சராசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாள்களில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்ற பரிசோதனையில், தினமும் இரண்டு முதல் மூன்று பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இன்று காலை எட்டு மணி நிலவரப்படி, தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவுமனையில் நடைபெற்ற சோதனையில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்ந்துள்ளது.