வருஷநாடு அருகே அதிகாலை 4 மணிக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே அதிகாலை 4 மணிக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார்.;

Update: 2022-03-15 02:00 GMT
வருஷநாடு அருகே அதிகாலை 4 மணிக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
  • whatsapp icon

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வருஷநாடு தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த கவின், 15 என்பவருக்கு அதிகாலை வலிப்பு நோய் ஏற்பட்டது. பக்கத்தில் இருந்த மகேஸ்வரன், 30 என்பவரது ஆட்டோவில் அவரை ஏற்றிக் கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தனர்.

வழியில் வலிப்பு அதிகமானது. கவின் கால் எட்டி உதைத்ததில் மகேஸ்வரன் தடுமாறினார். அப்போது ஆட்டோவும் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த பாலுாத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அமுதா, 45 தலையில் அடிபட்டு இறந்தார். க.மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News