வைகையில் வெள்ள அபாயம் குறைந்தது; இன்று 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

வைகை ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது.;

Update: 2021-12-09 02:30 GMT
வைகை அணை- கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால்,  கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வைகை அணையில்,  அதிக நீர் வரத்து இருந்தது. அணை நிரம்பியதால் வரும் தண்ணீர் முழுக்க ஆற்றில் திறக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு,  விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியை தாண்டியது. வைகை ஆற்றில்,  கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு இருந்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,  கடந்த இரண்டு நாட்களாக மழை குறைவால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை நிலரவரப்படி,  அணைக்கு விநாடிக்கு, 3100 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால்,  வைகை ஆற்றில் வெள்ள அபாயம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தற்போதும் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News