கலெக்டர் போட்டோவை பயன்படுத்தி குறுந்தகவல் அனுப்பிய மர்ம நபர் யார்?

தேனி கலெக்டர் முரளீதரன் படத்தை பயன்படுத்தி அரசு அலுவலர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிய வடமாநில இளைஞரை கைது தேடி வருகின்றனர்;

Update: 2022-06-12 02:45 GMT

கோப்புப்படம் 

தேனி கலெக்டர் முரளீதரன் போட்டோவை பயன்படுத்தி, (அதாவது ஒரு நம்பரில் வாட்ஸ் ஆப் செயலி உருவாக்கி, அதில் கலெக்டர் முரளீதரன் படத்தை புரொபைல் படமாக வைத்து) தேனி மாவட்ட அரசு ஊழியர்களுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. வழக்கமாக தேனி கலெக்டரிடம் இப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை இல்லை. எனவே சந்தேகம் அடைந்த அரசு ஊழியர்கள், இப்படி பயன்பாட்டில் இல்லாத ஒரு நம்பரில் இருந்து குறுந்தகவல் வருகிறதே, அதனை ஓப்பன் செய்தால் பணம் எதுவும் பறிபோகுமா? இப்படி அனுப்ப காரணம் என்ன? என இந்த விஷயத்தை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

கலெக்டர் இந்த நம்பரை பற்றி விசாரித்துள்ளார். அந்த நம்பரில் வடமாநில இளைஞர் ஒருவர் பேசியுள்ளார். உடனடியாக தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவிடம் இந்த தகவலை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி. சைபர் கிரைம் போலீசார் மூலம்  அந்த இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Tags:    

Similar News