இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.;
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 368 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு இதன் முடிவுகள் வெளியானது. இந்த அடிப்படையில் இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வெளியானால் அது அரசு சுகாதாரத்துறை வெளியிடும் மீடியா புல்லட்டினில் வெளியாகும் என தேனி மருத்துவக்கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.