வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாட்டம்: சிறப்பாறை கிராம மக்கள் உறுதி
வருஷநாடு மலைப்பகுதியில் புலி நடமாடுவதை பார்த்ததாக சிறப்பாறை கிராம மக்கள் உறுதி செய்துள்ளனர்.;
வருஷநாடு மலைப்பகுதியில் புலி வேட்டையாடுவதையும், நடமாட்டத்தையும் நேரடியாக பார்த்தோம் என சிறப்பாறை கிராம மக்கள் உறுதியாக தெரிவித்தனர்.
வருஷநாடு அருகே மயிலாடும்பாறையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது சிறப்பாறை கிராமம். இந்த கிராம மக்கள் மலையடிவாரத்தில் ஆடு, மாடு மேய்ப்பது வழக்கம். இந்த மக்களில் பலர் தங்கள் கிராமம் அருகே புலியை பார்த்தாக தெரிவித்தனர்.
இக்கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் கூறுகையில், கடந்த 15 நாளில் மட்டும் இரண்டு கன்றுகுட்டி, 20க்கும் மேற்பட்ட ஆடுகளை புலி அடித்துள்ளது. நான் புலி ஆடுகளை அடித்ததை நேரடியாக பார்த்தேன். கிராம மக்கள் பலரும் பார்த்துள்ளனர். வனத்துறையிடம் புலி நடமாடிய இடங்களை தெரிவித்தோம். அவர்கள் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.