தேனி மாவட்டம் முழுவதும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்
தேனி மாவட்டம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிமும்முரமாக நடைபெற்று வருகிறது;
நவம்பர் முதல் தேதி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், தேனி மாவட்டம் முழுதும் தொடக்க, நடுநிலை பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிக்குள் தண்ணீர் தேங்காதவாறும், பள்ளி வளாகங்களில் உள்ள புதர்களும் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. கிருமிநாசினிகள் தெளித்து பள்ளிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படுகின்றன. மழைநீர் கசியும் பள்ளிகளி்ல் முழுமையான சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளின் சுவர்கள் இடியும் நிலையில் இருந்தால், அந்த பள்ளி சுவர்களை முழுமையாக சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை வட்டார கல்வி அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.