தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சென்ற ஆண்டைவிட குறைவு
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டில் மிகவும் குறைவான அளவே பெய்துள்ளது;
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 166.16 மி.மீ., குறைவாக பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்தில் சற்று குறைவாகவே பதிவாகும். ஆனால் வடகிழக்கு பருவமழை மிகவும் அதிகளவு பெய்யும்.
இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மிக, மிக குறைவாகவே பதிவாகி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 540.24 மி.மீ., மழை பதிவானது. 2021ம் ஆண்டு இதே காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை 376.8 மி.மீ. மட்டுமே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட மிக குறைவான அளவு ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 166.16 மி.மீ., மழை குறைவாக பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என தேனி மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.