வளர்ச்சி பணிகளில் கூடுதல் அக்கரை காட்டுங்கள்: தேனி கலெக்டர் அறிவுரை
கடுமையான முயற்சிக்கு இடையே கொரோனா தொற்றை ஜீரோ இலக்கிற்கு கொண்டு வந்து விட்டோம். இதே நிலை நீடிக்க கடுமையாக உழைக்க வேண்டும்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முரளீதரன் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் மிகவும் கடுமையான முயற்சிக்கு இடையே கொரோனா தொற்றை ஜீரோ இலக்கிற்கு கொண்டு வந்து விட்டோம். இந்த சூழலை இப்படியே நிர்வகிக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இதுவரை கொரோனா, கொரோனா என்றே காலம் கடந்து விட்டது. இனியாவது மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் அதிகரிகள் அலுவலர்கள் கூடுதல் அக்கரை செலுத்த வேண்டும். மக்கள் நலப்பணிகளை செயல்படுத்துவதில் தீவிர ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.