கடன் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.யிடம் மனு

தேனி மாவட்டத்தில் கடன் தருவதாக கூறி மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்

Update: 2021-10-14 12:30 GMT

தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்ய வந்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள்

தேனியில் கடன் தருவதாக கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக 54 பேர் தேனி எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தேனி அன்னஞ்சி, ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் மைக்ரோ பைனான்ஸ் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பைனான்சில் கடன் வழங்க ஆள் சேர்ப்பது, கடனை வசூலிப்பது போன்ற பணிகளுக்கு 54 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.

இவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க 5 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். ஆட்களை பிடித்து வாருங்கள். உங்களுக்கு நீங்கள் கடன் வழங்க ஆள் சேர்க்கும் வீதத்திற்கு தகுந்தபடி ஊக்கத்தொகை, மாதாந்திர சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இவர்கள் 54 பேரும் கடந்த 20 நாட்களில் பலரை சேர்த்து 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்து கொடுத்துள்ளனர். இந்த பணத்துடன் மைக்ரோ பைனான்ஸை மூடி விட்டு அதன் நிர்வாகிகள் தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில், இந்த 54 பேரும், மக்களிடம் கடன் தருவதாக தாங்கள் வாங்கிய முன்பணத்தை கேட்டு மக்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர் எனக்கூறி, தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன் தலைமையில் இன்று தேனி எஸ்.பி.யிடம் முறையிட்டனர். மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. தெரிவித்தார்.

Tags:    

Similar News