தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில், ஆறு மாத இடைவெளிக்கு பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. கலெக்டர் அவ்வப்போது, கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள, திறந்த வெளிக்கு வந்து மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்.
இதனிடையே, நேரடியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த, முதல்வர் ஸ்டாலின் அனுமதித்ததை தொடர்ந்து இன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக ஏ.சி., அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ., ரமேஷ், திட்ட அதிகாரி தண்டபாணி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.