மேகமலை வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க தடை: வனத்துறை
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என, வனத்துறை தடை விதித்துள்ளது.;
சித்தரிப்பு படம்
தேனி மாவட்டம், மேகமலையில் மாடு மேய்க்கும் பணி அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மாடு மேய்ப்பதை வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பாஸ் பெறப்பட்ட மாடுகள் மட்டுமே மேய்க்க அனுமதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதல், மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாடுகள் மேய்ப்பதை முற்றிலும் தடுக்க வனத்துறை முடிவு செய்தது.
இந்த நிலையில், மேகமலையில் மாடுகள் மேய்ப்பதற்கு, வனத்துறையினர் முற்றிலும் தடை விதித்து உள்ளனர். இதற்கு, மாடு மேய்ப்பவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக , அவர்கள் அறிவித்துள்ளனர்.