வைகை அணையில் இரண்டு சடலங்கள் மீட்பு: போலீஸார் விசாரணை

வைகை அணையில் இருந்து இன்று பிற்பகலில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

Update: 2021-11-12 14:00 GMT

பைல் படம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணையில், கரட்டுப்பட்டி நீர் தேக்கப்பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. அதில் ஒருவர் தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயக்கொடி( 65 ) என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டது. மற்றொரு சடலம் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி அடையாளம் காண ஆண்டிபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News