பேருந்தில் தவறிய மணிபர்ஸ் - பேருதவி செய்த பெண்; பாேலீசார் பாராட்டு

பஸ்சில் ஒரு பெண் பணத்துடன் தவற விட்ட மணிபர்ஸை எடுத்த மற்றொரு பெண், அதனை போலீசார் மூலம் அந்த பெண்ணிடம் சேர்த்தார்.

Update: 2021-08-24 11:45 GMT

பஸ்சில் போடியை சேர்ந்த பெண் தவற விட்ட பணத்தை வருஷநாடு எஸ்.ஐ., அருண்பாண்டி அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

தேனி மாவட்டம், வாலிப்பாறைக்கு சென்ற அரசு பஸ்சில் போடியை சேர்ந்த பெண் தவற விட்ட மணிபர்ஸை எடுத்த கிராமத்து பெண் வனிதா அதனை பத்திரமாக போலீசிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் சேர்த்தார்.

போடியை சேர்ந்த பாண்டி என்பவர் மனைவி லட்சுமி தேனியில் இருந்து வாலிப்பாறை செல்லும் பஸ்சில் ஏறி கடமலைக்குண்டு என்ற கிராமத்திற்கு சென்றார். அப்போது தனது மணிபர்ஸ்சை 4500 ரூபாய் பணத்துடன் தவற விட்டார்.

இந்த பர்ஸ் தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு மனைவி வனிதா என்பவரிடம் சிக்கியது. அவர் அதனை பத்திரமாக கொண்டு சென்று வருஷநாடு எஸ்.ஐ., அருண்பாண்டியிடம் ஒப்படைத்தார்.

அருண்பாண்டியன் விசாரணை நடத்தி பர்ஸ்க்கு உரிய நபரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் பர்ஸை ஒப்படைத்தார். பணத்திற்கு ஆசைப்படாமல், ஒப்படைத்த கிராமத்து மனிதநேயத்தை நிரூபித்த வனிதாவை போலீசார் பாராட்டினர்.

Tags:    

Similar News