பளியன்குடி கிராம மக்களுடன் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றத்தினர்
காமராஜர் நற்பணி இயக்கம்- தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸார் இணைந்து பளியன்குடி இன மக்களுடன் தீபாவளியை கொண்டாடினர்;
காமராஜர் நற்பணி இயக்கம், தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் இணைந்து ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் கிராமத்தில் வசிக்கும் பளியங்குடி இன மக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
நிகழ்வுக்கு, தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். போடி டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கம்பம் மனோகரன், ஆரோக்கியராஜ், பொறியாளர் மெல்வின், கண்ணுச்சாமி, கணேஷ்மிஸ்ரா, காந்திராஜன், ராஜேந்திரபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பளியன்குடி இன மக்களுக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தாடை, இனிப்புகள் வழங்கினர்.