வருஷநாடு மலைப்பகுதியில் இரவில் நடக்கும் மணல் கடத்தல்
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் இரவு நேரத்தில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்க வேணX்;
வருஷநாடு மலைப்பகுதியில் இரவு நேரத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வருஷநாடு மலைப்பகுதியில் தங்கம்மாள்புரம் யானை கெஜம் ஆற்றில் மணல் வளம் அதிகம் உள்ளது. இங்குள்ள மணலை சிறு பைகளில் சேகரித்து மூடையாக கட்டி ரோட்டின் ஓரங்களில் வைத்து விடுகின்றனர். இப்படி ரோட்டோரம் வைக்கப்படும் மணல் மூடைகளை இரவில் வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்து விடுகின்றனர். இப்படி மணல் கடத்தல் பெரும் அளவில் நுாதன முறையில் நடைபெற்றாலும், வருவாய்த்துறையோ, போலீஸ் நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.