தேனி அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 24 பேர் படுகாயம்
தேனி மாவட்டத்தில் இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர்.;
தேனியில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ்சும், மதுரையில் இருந்து வருஷநாடு வந்த அரசு பஸ்சும் ஆண்டிபட்டி கணவாய் சாஸ்தா கோயில் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இரண்டு பஸ்களிலும் வந்த 24 பேர் பலத்த காயமடைந்தனர். தீயணைப்பு மீட்பு படையினரும், போலீசாரும் இவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.