கிராம மக்களை சிறைபிடித்த வனத்துறை: நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் விடுவிப்பு

மேகமலை வனப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய சென்ற கிராம மக்களை வனத்துறை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-12 12:08 GMT

வனநிலங்களில் விவசாயம் செய்ய சென்ற கிராம மக்களை சிறைபிடித்தவனத்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள வனநிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. இந்த வன நிலங்களில் இதற்கு முன் விவசாயம் செய்திருந்தால், அந்த சாகுபடியினை எடுத்துக் கொள்ளலாம். புதிய விவசாயம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசரடி கிராம மக்கள் தாங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்வோம் எனக்கூறி வனத்திற்குள் புறப்பட்டனர். அவர்களை மேகமலை வனத்துறையினர் சிறை பிடித்தனர்.

அதிகாரிகளும், பொதுமக்களும் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களது கிராமத்திற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News