தேனி மாவட்டத்தில் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்

தேனி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-27 14:28 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் வரும் அக்டோபர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தால், குறைகளை உடனடியாக தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News