தேனி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று
தேனி மாவட்டத்தில் தற்போது மொத்தம் 9 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 992 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது மொத்தம் 9 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாவது வாரமாக தொடர்ந்து கொரோனா இறப்பு இல்லை என தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.