தேனி மாவட்டத்தில் தொடரும் மழை: வேகமாக நிரம்பும் வைகை அணை
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.;
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் வைகை அணை நீர் மட்டம் 62 அடியை தாண்டி உள்ளது.
நேற்று மாலை 4 மணிக்கு மேல் தேனி மாவட்டத்தில் தொடங்கிய சாரல், பலத்த மழையாகவும் பெய்யாமல், தொடர் சாரலாகவே பெய்து வருகிறது. இன்று முழுவதும் சாரல் பெய்து கொண்டே இருந்தது.
இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2100 கனஅடியை தாண்டியது. அணையில் இருந்து விநாடிக்கு 1369 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 62 அடியை தாண்டி உள்ளது.