ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் கபசூர குடிநீர் வழங்கல்

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான குழந்தைகள் கபசுர குடிநீர் வாங்கி பருகி வருகின்றனர்;

Update: 2021-11-21 15:15 GMT

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் இலவசமாக வழங்கப்படும் கபசுர குடிநீரை குடிக்க குழந்தைகள் அதிகளவில் வருகின்றனர்.

மதுரை மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தினமும் கபசூரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவிற்கு முன்பே டெங்கு காய்ச்சலும், சிக்குன்குனியா காய்ச்சலும் மக்களை பாடாய்படுத்தியது. டெங்கு காய்ச்சலை தடுக்க சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர் பெருமளவில் உதவியது. இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ச்சியாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இதன் மூலம்,  அலோபதி சிகிச்சைக்கு தினமும் வரும் மக்கள் கூட கபசுரக் குடிநீரை குடித்து விட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தினமும் வழங்க தொடங்கிய சித்தமருத்துவ பிரிவு தற்போது வரை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தினமும் குடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது குழந்தைகளுக்கு அதிகளவு காய்ச்சல் பரவி வருவதால், குழந்தைகளை அழைத்து வந்து டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவு கபசுர குடிநீரை வாங்கி குழந்தைகளுக்கு தருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News