பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி தீவிரம்

பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-24 15:15 GMT

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2023 ஏப்ரல் 1ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது இந்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ஐந்து சதவீத முத்திரை கட்டணம் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும் இரண்டு சதவீத சொத்து வரி கட்டணம் மற்றும் இரண்டு சதவீத பதிவு கட்டணம் என மொத்தம் ஒன்பது சதவீதம் கட்டணத்தை பொதுமக்கள் பத்திர பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டும் இதற்கிடையே வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன/

அதாவது ஒரே தெருவில் இருக்கும் இடங்களுக்கு வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டன. எனவே இந்த வழிகாட்டி மதிப்பில் இருக்கும் குறைகளை களைந்து சீரமைக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பத்திரப்பதிவுத்துறை ,வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தற்போது உள்ள வழிகாட்டி மதிப்பை தெருக்கள் வாரியாகவும் சர்வே எண் வாரியாகவும் விரிவாக ஆய்வு செய்து முரண்பாடுகளை களைந்து உள்ளனர்.

யதற்போதைய நிலையில் 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் இந்த சீரமைப்பு பணிகள் முடிந்து கலெக்டர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள் மீதமுள்ள கலெக்டர்களும் அதற்கு ஒப்புதல் அளித்த பின் பொதுமக்களின் கருத்து கேட்புக்காக அந்த வழிகாட்டி மதிப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பொது மக்களின் கருத்துக்கள் கேட்டபின் அதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்படும். அரசு ஒப்புதல் அளித்த பின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்படும். இந்த பணிகள் முழுமை பெற இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என தெரிகிறது.

வழிகாட்டி மதிப்பு அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது:- தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி தான் நடக்கிறது உயர்த்தும் பணி நடைபெறவில்லை ஒவ்வொரு தெருவில் இருக்கும் முரண்பாடான வழிகாட்டி மதிப்புகள் முறைப்படுத்தப்படுகிறது இதனால் சில இடங்களில் வழிகாட்டி மதிப்புகள் குறைக்கப்படலாம் சில இடங்களில் அதிகரிக்கப்படலாம். பெரிய அளவில் வழிகாட்டி மதிப்பில் உயர்வு இருக்கவும் குறையவும் வாய்ப்பு இல்லை/

உதாரணமாக ஒரு தெருவில் ஒரு நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு ஒரு சதுர அடிக்கு 50 இருக்கும் அதே தெருவில் வேறு ஒரு இடத்திற்கு சதுர அடி 70 இருக்கும் அதில்  ரூ. 50 தான் என்று குழு முடிவு செய்தால் அங்கு 70 உள்ள வழிகாட்டி மதிப்பு 50 ஆக குறைக்கப்படும் இல்லையென்றால் 70 தான் சரி என்றால் ரூ. 50 உள்ள இடம் ரூ. 70 ஆக மாற்றப்படும் எந்த ஒரு வழிகாட்டி மதிப்பிற்கும் புதிதாக ஒரு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை எனவே உள்ளது தான் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News