விஜய் கட்சி அறிவித்த அடுத்த நொடியே டெல்லியில்.. யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?
புஸ்ஸி ஆனந்த் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;
புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் மற்றும் விஜய் கட்சியின் செய்தித் தொடர்பாளராக அறியப்பட்டவர். இவர் விஜய்யுடன் நெருங்கிய நண்பராகவும், பல ஆண்டுகளாக நடிகர் விஜய்யுடன் பணியாற்றியும் வருகிறார்.
அதேபோல் நடிகர் விஜய்யுடன் நலத்திட்டங்களை வழங்குவதிலும், சில கஷ்டமான சூழ்நிலைகளிலும் புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகிறார். கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை விளக்கி ஊடகங்களைச் சந்திப்பதில் அடிக்கடி பங்கேற்கிறார். விஜய் கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்நிலையில் தற்போது (பிப்ரவரி 2-ம் தேதி) விஜய் கட்சியின் பெயர் "தமிழக வெற்றி கழகம்" என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், கட்சியின் சார்பாக தேர்தல் ஆணையத்தில் உடனடியாக பதிவு செய்ய டெல்லி சென்றார். மேலும் கட்சியின் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழம் கட்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த புஸ்ஸி ஆனந்த்:
புஸ்ஸி ஆனந்த் ஒரு தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். விஜய் நடித்த "சச்சின்" திரைப்படத்தை தயாரித்தார்.
சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்.
விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் பங்கேற்றார். கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை ஊடகங்களுக்கு விளக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். தேர்தல் பிரச்சாரங்களில் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். கட்சிக்கு நிதி திரட்ட உதவுகிறார்.
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பின் உதவியாளராக பணியாற்றியவர் புஸ்ஸி ஆனந்த். மேலும் ரியல் எஸ்டேட் பணிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். முன்னாள் பிரெஞ்ச் ஆளுநர் புஸ்ஸி என்பவரது நினைவாக அந்தத் தொகுத்திக்கு புஸ்ஸி எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இவரது பெயருடன் புஸ்ஸி சேர்ந்துகொண்டது.
அந்த புஸ்ஸி தொகுதியில் அதிகமான இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள். அந்தத் தொகுதியில் விஜய்யின் ரசிகராக ரத்த தான முகாம் நடத்துதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் புதுச்சேரி வரும்போது அவருடன் பழகும் வாய்ப்பை பெறுகிறார். அவரிடம் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக தான் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துக்கூறுகிறார்.
இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த்தை விஜய்யிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகப்படுத்திவைக்கிறார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைகிறார். அதன் பிறகு விஜய்யுடன் நெருங்கி பழகுகிறார். அந்த நேரத்தில் காவலன் படம் தொடர்பான பிரச்னைகள் விஜய்யை மிகவும் பாதிக்கிறது.
இன்னொரு பக்கம் விஜய் மக்கள் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவாளர்கள் விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி போஸ்டர் அடிக்க துவங்குகிறார்கள். அவர்களை புஸ்ஸி ஆனந்த்திடம் சொல்லி நீக்க சொல்கிறார் விஜய். இது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அதிருப்தி ஏற்படுத்துகிறது. இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த் வார்டுகள் தோறும் கட்சியை வலுப்படுத்த சொல்கிறார் விஜய்.
இதனையடுத்து கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வெல்கின்றனர். இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த் மீது விஜய்க்கு நம்பிக்கை வலுவாகிறது. தன் அப்பாவுடன் முரண்பாடுகள் ஏற்பட்டபோது கூட புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவாக இருக்கிறார் விஜய்.