சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு முடிவு
சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சியில் முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினருமான டாக்டர் பன்னீர்செல்வம் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்
எங்களது நீண்ட நாள் கோரிக்கையான தமிழகத்தில் வகுப்புவாரி தொகுப்பு இட ஒதுக்கீடு அமைத்து தரவேண்டும், அம்பலக்காரர், வலையர் ,சேர்வை உள்ளிட்டவர்களுக்கு புனரமைப்பு வாரியம் அமைக்க வேண்டும் , போலி வன்னியர் சாதி சான்றிதழ்களை ரத்து செய்யவேண்டும்,சீர்மரபினர் ஆணையம் அமைத்து தருவேன் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை சிறுபான்மையினர் ஆணையம் அமைக்க வில்லை. இது தொடர்பாக அவரை சந்திக்க முயன்றபோது தேதி கூட தரப்படவில்லை ஆதலால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற 22-ஆம் தேதி தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றார்.