இந்தியாவுக்கு எதிராக பொய்களை பரப்பினால் இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கம்

இந்தியாவுக்கு எதிராக பொய்களை பரப்பினால் இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-19 17:39 GMT

பைல் படம்.

இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும், பொய்களை பரப்பும் இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டது.  இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது  தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள பல பெரிய நாடுகள் இதை அறிந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யூடியூப்பும் முன் வந்து அவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது. 

உளவுத்துறை அமைப்புகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்த முயற்சியில், கடந்த ஆண்டு டிசம்பரில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்புவதால் அவற்றைத் தடுக்க உத்தரவிட்டது.

எதிர்காலத்திலும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தை பிளவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் முக்கப்படும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் நெட்வொர்க்கை சேர்ந்தவை என்றும், இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றி போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் கூறியிருந்தது.

காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராம் மந்திர், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் பிளவுபடுத்தும் உள்ளடக்கத்தை இடுகையிட சேனல்கள் பயன்படுத்தப்பட்டன என்று அது கூறியது என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News