தஞ்சை பெரியகோவில் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம்
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம் நேற்று மாலை பக்தர்களின்றி எளிமையாக நடந்தது
தஞ்சை பெரியகோவில் பெரியநாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம் நேற்று மாலை பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டால், திருமண தோஷம் நீங்கும் எனவும், குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் ஒரு ஐதீகம் உண்டு.
இந்த திருக்கல்யாண வைபவத்தில், பக்தர்கள் வெற்றிலை, சீவல், பழங்கள், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு என பல்வேறு சீர்வரிசைகள் வழங்கி கலந்து கொள்வார்கள்.
தற்போது கொரோனா காரணமாக இதில் கலந்து கொள்ள பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் பக்தர்கள் யாருமின்றி நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் எளிமையாக நடந்தது.
இதில், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், கோவில் பணியானர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.