மாஜி அமைச்சர் தங்கமணி எங்கே? சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2021-12-15 02:45 GMT

முன்னாள் அமைச்சர் தங்கமணியின்  வீடு, உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் என, அவர் தொடர்புடைய  69, இடங்களில் இன்று காலை முதல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அந்த வீட்டில் தான் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கமணியின் மகன் தரணிதரன், சென்னையில் இருப்பதாகவும் தெரிகிறது. 

இதனிடையே, லஞ்ச ஒழிப்பு சோதனை நடக்கும் தகவல் அறிந்ததும், அதிமுகவினர் தங்கமணியின் வீட்டுக்கு முன்பாக திரண்டு, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையடுத்து சோதனை நடைபெறும் இடத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டவாறே உள்ளனர்.  இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News