சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பொன்ராஜ் என்ற இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Update: 2022-02-12 04:30 GMT

வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் பொன்ராஜ்.

புளியங்குடி டிஎன் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் பொன்ராஜ் 26. இவர் புளியங்குடியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பள்ளிவாசல் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் பொன்ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பொன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியதை தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் செல்லும் வழியிலேயே பொன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 6 மாதத்தில் வாலிபர் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News