தென்காசி அருகே கோவில்களில் இரவில் சுவாமி நகைகளை திருடிய இளைஞர் கைது

தென்காசி அருகே கோவில்களில் இரவில் சுவாமி நகைகளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-11-20 07:55 GMT

காவல்துறையினர் கைது செய்த பாலமுருகன்.

சிவகிரி அருகே இரவு நேரங்களில் கோவில்களில் திருடிய நபர் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் காட்டுப்புரம் பகுதியை சேர்ந்த அற்புதம் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது - 38)இவருக்கு மனைவி ஜெயராணி (வயது - 33), ஏசுராஜன் (வயது - 17), உதயகுமார் (வயது - 12) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் இரவு நேரங்களில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவில்களில் உள்ள உண்டியல்களை உடைத்து அதில் உள்ள பணம் மற்றும் அம்மன் கோவிலில் அம்மன் தாலி, சூலம், கண்காணிப்பு கேமரா, கணினி , அண்டா, பித்தளை பொருட்களை திருடிச் செல்வது வழக்கமாக கொண்டு இருந்து வந்துள்ளார்.


இந்நிலையில் சிவகிரி காவல் சரகம் ராயகிரியில் ஒரு சமூகத்திற்கு சொந்தமான ராயகிரி ஊருக்கு மேற்கே உள்ள பேச்சியம்மன் கோவிலில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது கிரில் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த போது, அருகே உள்ள வயல்காட்டில் உள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி  துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையில் தட்சிணாமூர்த்தி, சிங்கத்துரை மற்றும் காவல்துறையினர் ராயகிரி பகுதிக்கு வந்தனர்.  சிவகிரி காவல் ஆய்வாளர் காவலர்களோடு  விரைந்து சென்று குற்றவாளியை பிடித்து சிவகிரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இவர் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு சிவகிரி கொத்தாடப்பட்டி மற்றொரு சமூகத்திற்கு  சொந்தமான தொப்பை கிழவன் சுடலைமாடன் கோவிலில் உள்ள 3 கிராம் மதிப்புள்ள தங்கத்தாலி மற்றும் கண்காணிப்பு கேமராவை கணினி திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் இவர் சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருடியது தெரியவந்தது. இவரிடமிருந்து சுமார் 14.820 மில்லி தங்க பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News