சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 5 பேர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-11-03 15:15 GMT

சங்கரன் கோவில் அருகே வன விலங்குகளை வேட்டையாட சென்ற  ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட 5 பேர் கொண்ட கும்பல் செல்வதாக வனச்சரகர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர் திருமலைச்சாமி (20), ரஞ்சித் குமார்(25), திருப்பதி(26), மனோகர்(28), உட்பட 5 பேரை கைது செய்தனர். நெற்றிலைட், அரிவாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வனவிலங்குகள் வேட்டைக்கு சென்றது உறுதியானது.

பின்னர் ஐந்து பேருக்கும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புளியங்குடி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News