வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி: நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய மூன்று பேரூராட்சிகளில் நேற்று எந்த ஒரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Update: 2022-01-30 04:12 GMT

வாசுதேவநல்லூர் சிவகிரி ராயகிரி ஆகிய மூன்று பேரூராட்சிகளில் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளான நேற்று எந்த ஒரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நேற்றில் இருந்து தொடன்கியது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தமாக 61 வார்டுகள் உள்ளது. இதற்கு அரசியல் கட்சி சார்ந்த வேட்பாளர்களும் சுயேச்சைக் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அந்தந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் தற்போது வரை எந்த ஒரு வேட்பாளர்களும் இன்று வாசுதேவநல்லூர் சிவகிரி ராயகிரி ஆகிய மூன்று பேரூராட்சிகளில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு படிவங்களை மட்டுமே வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடத்தில் தடுப்பு வளையங்கள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News