சிவகிரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது

Crime News in Tamil -சிவகிரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-03 03:55 GMT

மது பாட்டில்களுடன் கைது செய்யப்பட்ட இருவர்.

Crime News in Tamil - தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு சத்திரம் பிள்ளையார் கோவில் அருகே சார்பு ஆய்வாளர் அமிர்தராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து மது பாட்டில்களை வைத்திருந்த தேவிபட்டினம் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் முனீஸ்வரன் (38) மற்றும் வாசுதேவநல்லூர் கலைநகர் காலனி பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரின் மகன் ஜெயசூர்யா(21) ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட முனீஸ்வரன் மீது திருட்டு, அடிதடி, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது போன்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News