தென்காசி மாவட்டம் புளியங்குடி கிளையில் அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவின் படி கிளையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் புளியங்குடி அரசு போக்குவரத்து கிளை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வார,விடுமுறை எடுப்பதை நிர்வாகம் தன்னிச்சையாக மாற்றியது சம்மந்தமாகவும், சிறப்பு விடுப்பு (மற்றும்) சம்பளம் மாதத்தின் இறுதி நாளில் ஏற்றாமல் நிர்வாகம் அவர்களுக்கு ஏற்ற தேதியில் ஏற்றுவது சம்மந்தமாக) 12/3 ஒப்பந்தத்தை மீறி தன்னிச்சையாக மாற்றியதை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூவையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச புளியங்குடி கிளைக் கழக செயலாளர் கணேசன், சுப்பையா, ராஜாஜி அமுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வசந்தம் சுப்பையா வரவேற்புரையாற்றினார். மாடசாமி, சுப்பிரமணியன், அந்தோணி, குமார் சுரேஷ், உலகராஜ் முத்துக்கிருஷ்ணகுமார் சிதம்பரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் போட்டனர். பின்னர் மாஸ்க் அணிந்தும் நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இறுதியில் கிளை பொருளாளர் மாடசாமி நன்றி உரை ஆற்றினார்.