சென்னையில் கார் பந்தயம் நடைபெறுவது ஒன்றும் தவறு இல்லை - ஓபிஎஸ்

சென்னையில் கார் பந்தயம் நடைபெறுவது ஒன்றும் தவறு இல்லை என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2024-09-01 14:00 GMT

செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாகவும் போதைப் பொருட்களின் விற்பனை தளமாக விளங்குகிறது.  சென்னையில் கார் பந்தயம் நடைபெறுவது தவறு ஒன்றும் எனவும் ஓபிஎஸ் பேட்டியளித்தார்.

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அந்தவகையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நெற்கட்டும் செவல் கிராமத்துக்கு வருகை தந்து மாமனார் பூலித்தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உறுதியாக அதிமுக ஒருங்கிணைந்து புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆட்சி நிறுவும் என்றும் அவர் பேசினார். தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீர்கெட்டு கிடப்பதாகவும் அவர் கூறினார்.

எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் பூலித்தேவருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு வெண்கல சிலை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

விஜய் கட்சியில் ஓபிஎஸ் மகன் இணைவதாக வரும் செய்தி தவறான செய்தி என்றும் அவர் கூறினார். கனிம வளங்கள் தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளதாகவும்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை மீட்பு குழு நாடு தழுவிய போராட்டத்தை நடத்தும் என்றும், சென்னையில் கார்பந்தயம் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு கார் பந்தயங்கள் நடைபெற கூடாது என்பது தவறான கருத்து எனவும் தெரிவித்தார்.


Tags:    

Similar News