தென்காசி: மலைவாழ் மக்களுக்கு, காவல்துறையினர் நிவாரண பொருட்கள்!
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதி மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.;
ஊரடங்கு காலங்களில் கஷ்டப்படும் மக்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சமூக அமைப்புகள், காவல்துறையினர், அரசுத்துறை அதிகாரிகள் பலர் பல்வேறு கட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கோட்ட மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் வனப்பகுதி மற்றும் அதனை சார்ந்த இடங்களுக்கு சென்று பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் பொருட்டு காவல்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இனைந்து அரிசி, பருப்பு, உட்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.