டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

Update: 2021-04-21 09:15 GMT

புளியங்குடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் சம்பவத்தன்று இரவு கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து கடையிலிருந்து சுமார் ரூ. 46000 மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ள கோழிப்பண்ணை யைச்சேர்ந்தவர்கள் தெரிவித்த தகவலையடுத்து அங்கு சென்ற புளியங்குடி காவல் டிஎஸ்பி சுவாமிநாதன் தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் தினேஸ்பாபு,காசிவிஷ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News