உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 12 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்.;
தமிழகம் முழுவதும் வரும் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புளியங்குடி அருகே தென்காசி - மதுரை சாலையில் முருகவேல் என்பவர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது பறக்கும் படை அதிகாரிகளான வேலம்மாள் தலைமையிலான அதிகாரிகள், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லபட்ட 12 லட்சத்தி எழுபது ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.