மழையால் குட்டையாக மாறிய சாலை: சரி செய்யாததால் விவசாயிகள் கவலை
சங்கரன்கோவில் அருகே குளம், குட்டை போல் காட்சியளிக்கும் சாலையால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரத்னபுரி கிராமத்தில் இருந்து கோட்டைமலையாறும் செல்லும் சாலையானது, மழை காலங்களில் தண்ணீர் தேங்கி குளம், குட்டை போல் காட்சியாளிக்கிறது.
தார் சாலை அமைக்காததால், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஆயிரகணக்கான விவசாயிகள், அவரவர் விவசாய நிலத்திற்கு செல்ல, குளம்போல் காட்சியளிக்க கூடிய இந்த சாலையை கடந்துதான் வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது.
எனவே ஆயிரகணக்கான விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, புளியங்குடி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.