பூலித்தேவன் 306 வது பிறந்த நாள் விழா: எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
பூலித்தேவனின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பூலித்தேவனின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல் கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவரின் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ், மதிமுக சார்பில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், திமுக சார்பில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.