பரிசு விழுந்திருப்பதாக கூறி ரூ.28 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பிடித்த நபரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2024-10-11 12:15 GMT

 கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்.

பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பறித்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி சங்குபுரம் பகுதிக்கு வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்ய வந்த நபரிடம் சோப்பு மற்றும் சில பொருட்கள் புகார் தாரர் வாங்கியுள்ளார். அந்த வியாபாரி பரிசு கூப்பன் ஒன்றை புகார்தாரரிடம் கொடுத்து சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து புகார்தாரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தங்களுக்கு ஒரு ஸ்கூட்டரும், ஒரு LED-TV மற்றும் 2.5 பவுன் தங்க செயினும் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார்.

அந்த பரிசு பொருளை வாங்குவதற்கு ரூ.28,000 வரி கட்ட வேண்டும் என்று சொன்னதை நம்பி புகார்தாரர் உடனே அந்த பணத்தை அனுப்பியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து பரிசு பொருள் மதுரைக்கு வந்துவிட்டது அதை பெற மீண்டும் ரூ.28,600 வரியாக கட்ட வேண்டும் என்று சென்னதை நம்பி மீண்டும் புகார்தாரர் அந்த பணத்தையும் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு புகார்தாரர் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் இணையதளத்தில் 30.09.2024 ஆம் தேதி கொடுத்த புகார் சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க *தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசனின் அறிவுறுத்தலின் பேரில் 09.10.2024 அன்று வழக்குப்பதிவு செய்து, பொறுப்பு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஸ்  தலைமையில் காவல் ஆய்வாளர் வசந்தி, சார்பு ஆய்வாளர்கள் சிவசங்கரி, செண்பகபிரியா, சிறப்பு சார்பு ஆய்வாளர் தனசேகரன் மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியில் துரிதமாக நடவடிக்கை எடுத்து பரிசு விழுந்திருப்பதாக ஏமாற்றி பணம் பறித்த குற்றவாளியான சுடலைமுத்து என்பவரை பாளையங்கோட்டையிலுள்ள அவரது வீட்டு முன்பு சென்று கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தீபாவளி சமயத்தில் இது போன்று பரிசுப் பொருட்கள் விழுந்திருப்பதாக யாரேனும் உங்களிடம் தொடர்பு கொண்டால் அவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News