வாசுதேவநல்லூர் அருகே லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து.
வாசுதேவநல்லூர் அருகே லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர்கள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமங்கலம் முதல் கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரத்னபுரி என்ற இடத்தில் சிவகாசியில் இருந்து லாரியில் பேப்பர் பண்டல்களை ஏற்றி கேரளா சென்ற லாரி எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
மோதிய வேகத்தில் லாரி தலைகுப்புற சாலையில் விழுந்ததில் லாரியில் இருந்த பேப்பர் பண்டல்கள் அனைத்தும் சாலையில் பறந்தன. இதில் நல்வாய்ப்பாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு வாகனங்களில் டிரைவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.