கன்றுகுட்டிகளை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம்: விவசாயிகள் அச்சம்.
வாசுதேநவல்லூர் உள்ள மாட்டுதொழுவத்தில் இருந்த இரண்டு கன்றுகுட்டிகளை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராகவன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்;டத்தில் உள்ள மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த இரண்டு கன்று குட்டிகளை சிறுத்தைபுலி கடித்து கொன்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் விவசாய தோட்டத்திற்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசு விவசாயதோட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும். மேலும் மெத்தனமாக செயல்பட்டு வரும் புளியங்குடி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.