புளியங்குடி அருகே சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய இடங்களில் சிறுத்தை, கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம்.;

Update: 2021-09-15 04:15 GMT
புளியங்குடி அருகே சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்:  வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
  • whatsapp icon

புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய இடங்களில் சிறுத்தை, கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம். கேமராக்களை பொறுத்தி கண்காணிக்கும் வனத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ராகவன் என்பருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகுட்டியை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டது. இதே போல் விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த மூதாட்டியை கரடி தாக்கி விட்டு சென்றதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் இருவருகின்றனர்.

தகவலறிந்த புளியங்குடி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புளியங்குடி, வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றிதிரிய வேண்டாம் மேலும் மேய்சலுக்காக கல்நடைகளை கொண்டு செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News