ஜெயலலிதா பிறந்த நாள் விழா: வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2022-02-24 11:30 GMT

வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக பயணியர் விடுதி முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவியும் இனிப்புகள் வழங்கியும் மரியாதை செலுத்தினர்.

இன்று புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக பயணியர் விடுதி முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான Cராஜாகிருஷ்ண முரளி(எ)குட்டியப்பா B.Com அவர்களின் ஆலோசனைப்படி வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான அ.மனோகரன் Ex, MLA அவர்கள் மாலை அணிவித்தும் மலர்தூவியும், இனிப்புகள் வழங்கியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News