வாசுதேவநல்லூர் பகுதிகளில் சாரல் மழை: அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.;

Update: 2021-08-30 05:00 GMT

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாெடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் நரிப்பாறை அருவி உட்பட அப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வர தொடங்கியதால் புளியங்குடி, சிவகிரி வனத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News