சங்கரன்காேவிலில் பலத்த மழை: வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்
சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் பெய்த மழையில் வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்து 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி;
சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் பெய்த மழையினால் வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாம்புக்கோவில் சந்தையில் உள்ள இந்திரா காலனியில் மாரியம்மாள்(40) தன்னுடைய மூன்று மகன்களுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் இடைவிடாது மழை பெய்ததனால் வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்ததனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாரியம்மாள், வினோத், அருண், முத்துக்குமார் உட்பட நான்கு பேர் மீது விழுந்த உடனே கூச்சலிட்டுள்ளனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்துப்பட்டி பஞ்சாயத்துதலைவர் இப்ராகிம் பலத்த காயமடைந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்று தந்து புதியதாக இலவச வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.