சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-01-08 13:07 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வெள்ளனக்கோட்டை கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் சண்முகவேல் (74 ) . இவரது உறவினரான ஈஸ்வரன் என்பவரது மகன் குருசாமி (64).

இவர்கள் இருவரும் நவச்சாலைக்கு அருகேயுள்ள வயலுக்கு சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.

முதலில் சண்முகவேல் தனது வயல்வெளியை பார்த்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியே உயர் மின்னழுத்த கம்பிகள் 4 சென்று கொண்டிருந்ததில் ஒன்று மட்டும் அறுந்து வயல்வெளியில் கிடந்துள்ளது.

இந்நிலையில் இதனை அறியாமல் மிதித்தபோது சண்முகவேல் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து அவர் உயிரிழந்தார். சில மணி நேரம் கழித்து சென்ற அவரது உறவினரான குருசாமி இறந்து கிடந்த வேலுச்சமியை பார்த்ததும் பதட்டமடைந்து அவரை எழுப்ப முயற்சி செய்தார்.  அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளன கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News