வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் தீயனைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் சில நேரங்களில் கிணறுகளில் தவறி விழுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் வாசுதேவநல்லூர் புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மான் கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை மீட்டனர்.
மானுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதன் பின்பு கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார் மானுக்கு சிகிச்சை அளித்தார். தீயணைப்புத்துறையினர் மானை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.